fbpx

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம்!. ராணுவ விமானங்களில் எல்லைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்!. வெள்ளை மாளிகை!

Illegal immigrants: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. ராணுவ விமானங்களில் ஏற்றி, எல்லை தாண்டி கொண்டு செல்லப்படுகின்றனர். இது தொடர்பான புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

பதவியேற்ற உடனேயே அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் உத்தரவும் அடங்கும். தற்போது புதிய அதிபரின் இந்த உத்தரவை நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடையாளம் காணப்பட்டு, பிடிக்கப்பட்டு பின்னர் அமெரிக்க எல்லைக்கு வெளியே விடுவிக்கப்படுகிறார்கள்.

வெள்ளை மாளிகை தனது பதிவில் படத்துடன், ‘வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன, வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன’ என குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் இரண்டு விமானங்கள் புறப்பட்டன. இரண்டிலும் 80-80 சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த விமானங்கள் அமெரிக்காவின் அண்டை நாடான குவாத்தமாலாவுக்கு சென்றன. அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவும் கவுதமாலாவும் அமெரிக்காவும் உறுதி பூண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: பிணைக் கைதிகள் விடுவிப்பு!. யார் அந்த 4 ராணுவ வீராங்கனைகள்?. வெளியான அறிவிப்பு!.

English Summary

Illegal immigrants are being deported! They are being taken to the border on military planes! The White House!

Kokila

Next Post

'திராவிட மாடல்' என்று சொன்னால் கோபம் வருகிறது..!! நாங்க பயந்துகிட்டு மூலையில் ஒடுங்கிக் கிடக்க மாட்டோம்..!! கொந்தளித்த CM ஸ்டாலின்..!!

Sat Jan 25 , 2025
Chief Minister MK Stalin has indirectly criticized Thaweka leader Vijay, saying that those who start parties are now bragging about coming to power immediately.

You May Like