fbpx

உஷார்…! இது போன்ற எண்ணில் கால் வந்தால் உடனே இந்த இலவச எண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும்…!

தொலைத்தொடர்புத் துறை, தமிழ்நாடு எல்எஸ்ஏ, மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஏர்டெல் தமிழ்நாடு ஆகியவற்றின் அதிகாரிகள், மத்திய உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சென்னை கிண்டியில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை செய்து, அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு அமைப்பைக் கண்டுபிடித்தனர்.

உரிமம் பெற்ற ஐ.எல்.டி.ஓ நெட்வொர்க்கைத் தவிர்த்து சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்ற சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) பெட்டிகள் மற்றும் சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர் / எஃப்.டி.டி.எச் ரூட்டர் ஆகியவற்றைக் கொண்ட சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இத்தகைய சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அரசுக் கருவூலத்திற்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சட்டவிரோத செயல்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏர்டெல் தமிழ்நாடு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

உள்ளூர் சி.எல்.ஐ அல்லது தங்கள் தொலைபேசியில் எந்த எண்ணும் காட்டப்படாத சர்வதேச அழைப்பைப் பெறுவது குறித்து 1800 110 420 அல்லது 1963 என்ற கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும்.

Vignesh

Next Post

அதிரடி...! பாஸ்மதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முடிவு...! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்...!

Mon Jul 31 , 2023
பாஸ்மதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது . நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, இயற்கை நறுமணம் கொண்ட பாஸ்மதி அரிசி […]

You May Like