எனக்கு குழந்தைகள் பிடிக்கும். அவர்களை வளர்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் இந்திய சட்டத்தில் அதற்கு சாத்தியமில்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் சுவாரஸிமாக பேட்டியளித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் சல்மான் கான். அவ்வபோது சில சர்ச்சைகளில் சிக்கினாலும் பாலிவுட்டில் அசைக்க முடியாத நட்சத்திரமாக திழ்ந்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்ல பிரம்மாண்டமான பொழுது போக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை 15 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளார்.சமீபத்தில் சல்மான் கான் நடித்து ரம்ஜான் பண்டிகையன்று வெளியான படம்தான் “ கிசி கா பாய் கிசி கி ஜான் ’’ . இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடித்து வெளியான “வீரம்” படத்தின் ரீமேக்காகும். இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற யெண்டம்மா பாடலுக்கு “நாட்டு நாட்டு” பாடலின் ஹுக் ஸ்டெப்பை மறு உருவாக்கம் செய்த வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் நடிகர் ராம்சரண், சல்மான் கான், வெங்கடேஷ் ஆகியோர் நடனமாடினர்.
இந்த நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் சல்மான் கான் “ எனக்கு குழந்தைகள் பிடிக்கும். அவர்களை வளர்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் இந்திய சட்டத்தில் அதற்கு சாத்தியமில்லை” என தெரிவித்துள்ளார். அதாவது, எனக்கு குழந்தைகளை பிடிக்கும். குழந்தைகளை வளர்க்கும் திட்டம் உள்ளது. ஆனால் அதற்கு இந்தியாவில் உள்ள சட்டத்தில் சாத்தியமில்லை. கரண் ஜோஹர் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டார். ஆனால் தற்போது சட்டங்கள் மாறிவிட்டன என்று கூறினார்.
மேலும், ஒரு தாய்தான் குழந்தைகளுக்கு நல்லது. என் வீட்டில் நிறைய தாய்மார்கள் உள்ளனர். ஒரு வேளை வருகிற ஐந்து ஆண்டுகளில் எனக்கு குழந்தைகள் பிறந்தால் அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடவும், விளையாடவும் எனக்கு நேரம் கிடைக்கும். நான் காதலில் துரதிர்ஷ்டாலி” எனவும் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.