fbpx

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: 2022 ஆண்டுக்கான குரூப் 4 முடிவுகள் எப்போது?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ( 24.07.2022) 7301 பணியிடங்களுக்காக, சுமார் 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 போட்டி தேர்வுக்கான முடிவுகள், அக்டோபர் மாதமே வரவேண்டிய நிலையில் இன்னும் வரவில்லை, மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக் அறிவிக்கப்பட்டது.

மேலும் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் படி டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் தள்ளிப்போனது. ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் வந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி முடிவுகள் எப்போது என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்கள் முன்பு குரூப் 4 பணியிடங்களில் 2500 பணியிடங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 7,301 பணியிடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

Kathir

Next Post

ரெடியா இருங்க...! வெளியான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பட்டியல்...! முழு விவரம் இதோ...

Fri Dec 30 , 2022
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பட்டியலை சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும். காலை 10.30 மணிக்குத் தேர்வு தொடங்கி நண்பகல் 1.30 மணிக்கு நிறைவடையும். தேர்வு முடிவுகள் […]
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை..! தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்..!

You May Like