fbpx

இலவச மின்சாரம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!! மக்களே இதை கவனிச்சீங்களா..?

தமிழ்நாட்டில் இந்தாண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கும் வந்துள்ளது. மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்திருக்கிறது.

அந்த வகையில், தற்போது 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். அதேபோல, ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒன்றாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும், அவை இணைக்கப்படாது என்றும், அவற்றுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்றும் மின்சார வாரியம் கூறியுள்ளது. எனவே, மின்வாரியம் வருவாயை பெருக்க ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் கணக்கீடு செய்யும் புதிய நடைமுறை சென்னையில் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

எனவே, ஒரே உரிமையாளரின் 2 மின் இணைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்காக அது போன்ற இணைப்புள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், ”ஒரு வீட்டில் 2 இணைப்புகள் இருந்தால், தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக பெறுகின்றனர். அதே போல் வர்த்தக நிறுவனத்துக்கு இரு இணைப்புகள் இருக்கும் போது மின் கட்டணம் குறைவாக வரும். ஆனால், ரகசிய கணக்கெடுப்பில் இத்தகைய இணைப்புகள் கண்டறியப்பட்டு இரு வீடுகளில் ஒன்றுக்கு மட்டும் 100 யூனிட் கழித்து கட்டணம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

Read More : அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்!. புதிய PPF விதிகள் இதோ!

English Summary

If there are two electricity connections, a new procedure has been implemented in Chennai to combine them into one electricity connection and deduct 100 units free of charge from only one of them.

Chella

Next Post

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி வெற்றி!. பரிசுத் தொகை அறிவிப்பு!. எவ்வளவு தெரியுமா?

Wed Sep 18 , 2024
India's ACT triumph: Hockey India announces cash prize of Rs 3 lakh for each player

You May Like