fbpx

Chennai: முக்கிய அறிவிப்பு!… ரயில்கள் நிறுத்தம்!… இன்று இந்த வழித்தடங்களில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

Chennai: சென்னையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இன்றும்ம் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு ஈடு செய்யும் வகையில் பயணிகளின் நலன் கருதி கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதன்படி பயணிகளின் வசதிக்கென தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வழித்தடத்தில் இன்று 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுப்பற்றி போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்னக ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பயணிகள் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக காலை 10 மணி முதல் மதியம் 03:15 மணி வரை சென்னை கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று பிராட்வேயில் இருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரம் செல்வதற்கு 60 பேருந்துகளும், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல் கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பேருந்துகளும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தி. நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பேருந்துகளும் கூடுதலாக இன்று இயக்கப்பட உள்ளது.

Readmore:Rameshwaram Cafe குண்டுவெடிப்பு..!! 3 மாதங்களுக்கு முன்பே ஸ்கெட்ச்..!! வெளியான அதிர்ச்சி சதித்திட்டம்..!!

Kokila

Next Post

Polio: காலை 7 முதல் 5 மணி வரை 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...!

Sun Mar 3 , 2024
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் […]

You May Like