fbpx

புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதங்கள்! அதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

மகாளயபட்ச காலத்தில் இது மத்யாஷ்டமி திதியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். இந்த புரட்டாசியில் சனிக்கிழமை விரதத்தோடு வேறு சில விரத வழிபாடுகளும் வருகின்றன. புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. பனிரெண்டு முடிச்சுகள் கொண்ட சரடை(கயிறை) உங்களின் வலது கையில் கட்டி கொண்டு விரதமிருந்தால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும். சஷ்டி – லலிதா விரதம் என்பது புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வ மங்களங்களையும் அருள்வாள். புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் மஹாலட்சுமி விரதம் ஆகும். ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும். ஜேஷ்டா விரதம் என்பது புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும். கபிலா சஷ்டி விரதமானது
புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.

மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான காலம். மகாளயம் கூட்டாக, ஒன்றாக என்று அர்த்தம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். நம் முன்னோர்கள் அனைவரும் கூட்டாகவும் ஒன்றாகவுமாக பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு, நம் வீட்டுக்கு வந்து நம்மைப் பார்க்கிறார்கள் என்பதாக ஐதீகம். இந்த நாட்களில் விரதமிருந்து தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுங்கள். பித்ரு கடன், பித்ரு தோஷம் நீங்குவதோடு வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்க உங்களை முன்னோர்கள் ஆசீர்வதித்து அருளுவார்கள்.

Kokila

Next Post

மதுபிரியர்களுக்காக தனி நாடு!… எங்கு உள்ளது தெரியுமா?… சுவாரஸிய தகவல்கள் இதோ!

Mon Oct 2 , 2023
கிரேக்க நாகரிகத்தை உலகுக்குக் காட்டும் நகரமான ஐரோப்பிய நாடான மாசிடோனியா பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம். கிரேக்க மாமன்னர் அலெக்ஸாண்டர் ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்த நகரம் மாசிடோனியா. அன்னை தெரசா பிறந்த நகரமான மாசிடோனியாவில், பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளன. தென் கிழக்கு ஐரோப்பாவில், இன்று வடக்கு மாசிடோனியா குடியரசு தனிநாடாக உள்ளது. கிரீஸ், அல்பானியா, பல்கேரியா, செர்பியா என பல நாடுகளால் சூழப்பட்ட வடக்கு மாசிடோனியா […]

You May Like