திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in என்று இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.