fbpx

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இன்று முதல் விடைத்தாள்‌ நகல் பதிவிறக்கம் செய்யலாம்…!

அரசு தேர்வு துறை இயக்குனர்‌ சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள்‌, விடைத்தாள்‌ நகலை இன்று மதியம்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

மாணவர்கள்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைபதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள்‌ நகலை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. விடைத்தாள்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு அரசு தேர்வு துறையின்‌ இணையதளத்தில்‌ இருந்து விண்ணப்பித்தை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு நகல்கள்‌ எடுத்து மே 31ஆம்‌ தேதி மதியம்‌ முதல்‌ ஜூன்‌ 3-ம்‌ தேதி மாலை 5 மணி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறு கூட்டல்‌ மற்றும்‌ மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாக செலுத்த வேண்டும்‌.

Vignesh

Next Post

இன்று காலை 10.30 மணி முதல் விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌...! ஆட்சியர் தகவல்...!

Tue May 30 , 2023
நாமக்கல்‌ மாவட்ட மே 2023-ஆம்‌ மாதத்திற்கான விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ இன்று முற்பகல்‌ 10.30 மணிக்கு, நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்‌ விவசாயிகள்‌, விவசாய சங்கப்‌பிரதிநிதிகள்‌ தங்களது பயிர்‌ சாகுபடிக்குத்‌ தேவையான நவீன தொழில்நுட்பங்கள்‌, வேளாண்‌ ஆடு பொருள்‌ விவரங்கள்‌,வேளாண்மை உழவர்‌ நலத்துறை மற்றும்‌ இதர துறைகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ மானியத்‌ திட்டங்கள்‌ குறித்து அறிந்து கொள்வதுடன்‌ […]

You May Like