சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் இன்று(டிசம்பர்-3) பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”தொடர் பெரும் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை சரி செய்யும் வகையில் 3-ம் தேதி சனிக்கிழமை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாட அட்டவணை பின்பற்றி செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை இன்று வகுப்புகள் கிடையாது. இவர்களுக்கு வழக்கமான வாரவிடுமுறை தினமாக இருக்கும். 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.