fbpx

மாணவி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்..! ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்..!

கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, மாணவி இறப்புக்கு நீதி கேட்டு 17ஆம் தேதி பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி முன் கலவரத்தில் ஈடுபட்டனர். மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி உடல் கடந்த மாதம் 14ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மாணவி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்..! ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்..!

பின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் மற்றும் அரசு மருத்துவர்கள் 3 பேர் கொண்ட குழு முன்னிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பின் மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சித்தார்த் தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.

மாணவி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்..! ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்..!

நீதிமன்ற உத்தரவுபடி, புதுச்சேரி ஜிப்மர் குழுவிடம் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர். அந்த அறிக்கையை ஜிப்மர் குழுவினர் முழுமையாக ஆய்வு செய்தனர். பின் அதற்கான அறிக்கையை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர். இதற்கிடையே, உயிரிழந்த மாணவியின் தோழிகள் இருவர் நேற்று விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

Chella

Next Post

இந்தியாவில் குறையும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...! மத்திய சுகாதாரத்துறை தகவல்...!

Tue Aug 23 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 8,586 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 84 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like