fbpx

வயநாடு பேரழிவு எதிரொலி!. தமிழக வனத்துறை எச்சரிக்கை!. கடுமையாகும் விதிகள்!. விரைவில் அமலாகும் சட்டம்!.

TN Govt Warning: தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பசுமை தமிழகம் என்ற இயக்கம் துவக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரங்கள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது, ஒவ்வொரு பகுதியிலும், அரசு மற்றும் தனியார் வாயிலாக மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில், ஒவ்வொரு மரக்கன்று குறித்த துல்லியமான விபரங்களை, ஆன்லைன் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மரங்களை பாதுகாப்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த வகையில் மரங்களை வெட்டுவதை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், தனியார் நிலங்களில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டுவது, இடம் மாற்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது கடுமையாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழகத்தில் பசுமை பரப்பை உயர்த்துவதில், பழைய மரங்களை பாதுகாப்பது மிக முக்கியம். குறிப்பாக, அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரங்கள், சமூக விரோதிகளால் வெட்டி எடுத்து செல்லப்படுகிறது.

இந்த வகையில் அரசுக்கு சொந்தமான நிலங்களில், மரங்களை அனுமதியின்றி வெட்டுவோருக்கு, சிறை தண்டனை உள்ளிட்ட, கடும் தண்டனை வழங்கும் வகையில் விதிகள் திருத்தப்பட உள்ளன. இதற்காக, புதிய சட்டத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Readmore: இரத்த தானம் செய்வதில் இருந்து திருநங்கைகளுக்கு விலக்கு!. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

English Summary

Imprisonment for cutting trees! Forest department alert! Strict rules!

Kokila

Next Post

4 மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்... கொட்ட போகும் அதி கனமழை...!

Sat Aug 3 , 2024
According to the Meteorological Department, there is a chance of rain in Tamil Nadu from today to the 6th.

You May Like