fbpx

DMK: 2013-ம் ஆண்டு ஜாபர் போதை பொருள் கடத்தலுக்காகக் கைது…! ஆதாரத்துடன் போட்டுடைத்த அண்ணாமலை…!

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், ஒரு பிரபல குற்றவாளி என்பதும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என்பதும் தற்போது அனைவரும் அறிந்த உண்மையாகியிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கடந்த 2019 ஆம் ஆண்டு, 38.687 கிலோ கேட்டமின் (போதைப் பொருள் பயன்பாட்டுக்காக) மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் மற்றும் சிலர், போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இடம்பெற்ற ஜூகோ ஓவர்சீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜாபர் சாதிக் மற்றும் ஒரு பிரபல நபர், தமிழகத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜாபர் போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்டதையும், 2019 ஆண்டு, போதைப்பொருள் கடத்தி, கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்ததையும் பற்றித் தெரியாத திமுக அறிவிலிகளைப் போல, தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக முதல்வர் அவர்கள் இவற்றிற்கு பதிலளிக்க வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Modi: இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!… உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை!… என்ன திட்டங்களை தொடங்கி வைக்க போகிறார்?

Mon Mar 4 , 2024
Modi: 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக […]

You May Like