fbpx

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக கூட்டணி..? நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன..?

மக்களவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைக்காததால் வட மாவட்டங்களில் அதிமுக தோல்வி அடைந்ததாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக 3 ஆவது நாளாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், அதிமுக தோல்வி அடைந்தது குறித்து அத்தொகுதி நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சித் தலைமை ‘யாருடன் கூட்டணி வைக்கலாம்?’ என கேட்ட நிலையில், ‘நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும்’ என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் ‘பாமக உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும்’ என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 1999ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஜெயலலிதா இதேபோன்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாகவும், 2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்ததாகவும், 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றவர்களின் ஆதரவாளர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் போன்ற முக்கிய தகவல்களையும் கட்சியின் தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : ’கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் என்ன.. ரூ.20 லட்சம் கூட முதல்வர் கொடுப்பார்’..!! ’யாரும் தலையிட முடியாது’..!! சபாநாயகர் அப்பாவு

English Summary

It has been reported that AIADMK executives have demanded an alliance with Naam Tamilar Party in the 2026 assembly elections.

Chella

Next Post

ஸ்டார் சின்னம் கொண்ட ரூ.500 நோட்டு போலியா? உண்மை என்ன?

Fri Jul 12 , 2024
Is a Rs 500 note with a star symbol fake? Some users made this claim on social media. According to a viral post on social media, a user claimed that a Rs 500 note with a star symbol is fake.

You May Like