நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார். தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், இது அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியது. தற்போது, மாவட்டங்கள் வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெற்றவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது தவெக விளக்கம் அளித்துள்ளது.
Read More : BREAKING | முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பிரேன் சிங்..!! மணிப்பூர் அரசியலில் அதிரடி திருப்பம்..!!