fbpx

மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவமா? “நீ அந்த ஊர் தானனு சாதி பெயரை சொல்லி அடிச்சாங்க!!” – நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி அருகே அரசு பள்ளியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் நடந்த மோதலில், இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதி அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும் பொன்னாகுடி, மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே நேற்று பள்ளி துவங்கியதும் மோதல் ஏற்பட்டது. சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த மோதலில், 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கையில் படுகாயமும், மற்றொரு மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைந்து போக செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்..

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், இப்பள்ளியில் அடிக்கடி சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் தொடர்பே இல்லாத மாணவர்கள் காயமடைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட பொன்னாகுடியை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், “மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொன்னாகுடியை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டனர். அப்போது, நாங்களும் பொன்னாகுடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, ஜாதி பெயரைச் சொல்லி எங்களை தாக்கினர். எங்கள் ஊரை வைத்து ஜாதி அறிந்து கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இப்பள்ளியில், இரு சமூக மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் நடைபெறுகிறது” எனத் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாதிப்பிரச்சினையில் பிளஸ் 2 மாணவனை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த அந்த மாணவனின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில், அதே திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் சாதியப்பிரச்சினையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more | பரபரப்பு…! ராகுல் காந்தி ஆற்றிய உரையிலிருந்து 11 பகுதிகள் நீக்கம்…!

English Summary

In a clash between students belonging to two communities in a government school near Tirunelveli, two students were seriously injured and admitted to the hospital

Next Post

”பாஜகவுடன் கூட்டணி வைக்கிறாரா தவெக தலைவர் விஜய்”..!! விஜயதாரணி சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா..?

Tue Jul 2 , 2024
Former MLA and BJP executive Vijayatharani has said that Tamil Nadu Victory Kazhagam President Vijay will support Prime Minister Modi.

You May Like