அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதுவே மாலை நேரத்தில் திடீரென மழையும் பெய்தும் வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் திருத்தணியில் 13 செ.மீ. மழையும், தாம்பரத்தில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய பகுதியில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.