இன்னும் சற்று நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில், நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை பெய்தாலும் பல மாவட்டங்களில் லேசான மேகமூட்டங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.