fbpx

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில்; தற்கொலைப்படை தாக்குதல்…19 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் ஷியைட் பகுதியில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காயமடைந்து உள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகமாக கருதப்படும் ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. கடந்த வருடம் ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றினர். அதில் இருந்து அவர்களுக்கு போட்டியாக நினைக்கும் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர்கள் ஹசாரா சமூகத்தை குறி வைத்து தாக்குல் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஷியைட் பகுதியில் வாழும் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இருந்தாலும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Rupa

Next Post

நடிகர் விஷால் வீட்டில் கல்வீச்சு..! சிக்கிய 4 பேர்..! என்ன காரணம் தெரியுமா?

Fri Sep 30 , 2022
நடிகர் விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த சம்பவம்தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலின் வீடு, சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷால் வீட்டின் வெளியே, முதல் மாடியில் இருக்கும் படிக்கட்டில் அமைத்துள்ள கண்ணாடியினை, சிவப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த மர்ம நபர்கள், கல்லால் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியனர். […]
நடிகர் விஷால் வீட்டில் கல்வீச்சு..! சிக்கிய 4 பேர்..! என்ன காரணம் தெரியுமா?

You May Like