பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் மிகவும் அரிதான வழக்கு ஒன்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் கணவர் உடலுறவு கொள்ளும் இருப்பதாக மனைவி புகார் அளித்திருக்கும் சம்பவம் இங்கு பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள லால் கஞ்ச் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது . அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார். அந்தப் புகாரில் தனக்கும் தனது கணவருக்கும் கடந்த 2021 ஆம் வருடம் மே மாதம் திருமணம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் நடைபெற்ற நாள் முதல் தற்போது வரை தனது கணவர் தொடர்ந்து உடலுறவுக்கு மறுத்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
தனது கணவர் தன்னோடு உடலுறவு கொள்ளாமல் இருப்பதால் மன வேதனை அடைந்து தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கணவன் உடலுறவுக்கு மறுத்தது தொடர்பாக அவர் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு உடலுறவுக்கு மறுத்த கணவனை விவாகரத்து செய்ய மனைவி தொடர்ந்த வழக்கில் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
English summary: An young woman registered a complaint against her husband for not being intimate with her.