தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வந்த நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று, தங்கத்தில் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ480 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ20 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ160 குறைந்து,ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.54,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read more | வங்கி ஆவணங்கள் : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!!