இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 63ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று (பிப்.10) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ரூ.7,980-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கு விற்பனையாகிறது. அதேபோல், இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிரான் ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.