15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற 2ஆவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 214 எடுத்து சென்னை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது. மழைக்கு பின் தொடங்கிய போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 15வது ஓவரின் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றது.
இந்த வெற்றியின் மூலமாக கடைசி பந்தில் வெற்றி பெற்ற 2ஆவது அணியாக சிஎஸ்கே புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, ஐபிஎல் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.