எனது கடினமான காலகட்டங்களில் ராமரின் பெயர் எனக்குப் பாதுகாவலனாக இருந்தது, இப்போதும் அந்தப் பெயர் என்னைப் பாதுகாத்து வருகிறது என்று அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு தனது வாழ்த்துக்களை கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் கலையும், பாரம்பரியமும் கொண்ட அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவை இன்று நண்பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாகசாலையில் அந்த கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. 121 ஆச்சாரியார்கள் இந்த பூஜைகள் மற்றும் யாகங்களை நடத்தி வருகிறார்கள். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இதற்காக 11 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், பிரதமர் மேற்கொண்ட 11 நாள் விரதம் பற்றியும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் 11 நாட்கள் மேற்கொண்ட கடுமையான விரதம் புனிதமான சடங்கு மட்டுமல்ல. ராமபிரானுக்கான அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவை அடங்கிய உயரிய ஆன்மீக பணியாகும்” என்று கூறியுள்ளார். மேலும் அயோத்தி செல்லும் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குடியரசுத்தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராம் கதாவின் இலட்சியங்கள் தேசத்தைக் கட்டுபவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன. காந்திஜி சிறு வயது முதல் ராமநாமத்தில் தஞ்சம் அடைந்தார், ராம்நாமம் அவரது இறுதி மூச்சு வரை அவரது நாவில் இருந்தது. காந்திஜி சொன்னார், ‘என் மனமும் இதயமும் நீண்ட காலத்திற்கு முன்பே, கடவுளின் உயர்ந்த குணத்தையும் பெயரையும் உண்மையாக உணர்ந்திருந்தாலும், ராமரின் பெயரால் மட்டுமே சத்தியத்தை நான் அங்கீகரிக்கிறேன். நான் மிகவும் கடினமான காலகட்டங்களில் ராமரின் பெயர் எனக்குப் பாதுகாவலனாக இருந்தது, இப்போதும் அந்தப் பெயர் என்னைப் பாதுகாத்து வருகிறது.
சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்ற பகவான் ஸ்ரீராமரின் இலட்சியங்கள், நமது முன்னோடி சிந்தனையாளர்களின் அறிவுசார் உணர்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.