தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (டிச.16) முதல் வரும் டிச.22ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிச.16, 17இல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்றும் நாளையும் 12 முதல் 20 சென்டி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கரூர், சேலம், தேனி ஆகிய 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.