fbpx

அடுத்த 3 மணி நேரத்தில்..!! 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை மையம் தகவல்..!!

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35.36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ ஆயுத கிடங்கு..!! கரையோரம் ஒதுங்கிய வெடிபொருட்கள்..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

Fri Oct 6 , 2023
சிக்கிம் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட மழை, பெருவெள்ளத்தில் ராணுவத்தின் ஆயுத கிடங்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சிக்கிம் மாநிலத்தில் லோனாக் ஏரியில் மேகவெடிப்பால் பெருமழை கொட்டி அதன் கரை உடைந்து டீஸ்டா நதியில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 14 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், பெருவெள்ளத்தில் சிக்கிய 6 ராணுவ வீரர்கள் உட்பட 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். […]

You May Like