fbpx

அடுத்த 3 மணி நேரத்தில்..!! குளிர்விக்க வரும் மழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஏப்ரல் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Chella

Next Post

இந்த 5 மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

Sun Apr 9 , 2023
நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், […]

You May Like