fbpx

அடுத்த 3 மணி நேரத்தில்..!! இந்த 9 மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை திருப்பூர், கரூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அதிகரிக்கும் நீர்மட்டம்..!! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Fri Nov 10 , 2023
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு இருக்கும் போது […]

You May Like