நடப்பாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்து, மாணவர்கள் அனைவரும் ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. அதேபோல, மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வரும் மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், 10ஆம் தேதி பத்தாம் வகுப்பும், 14ஆம் தேதி 11ஆம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சுமார் 40,000 மாணவர்கள் தேர்வுக்கே வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், ‘ஆப்சென்ட்’ ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தெருவாக்களின் தேர்வுகளின் முடிவுகள் வெளியானதும், துணை தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.