fbpx

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. வரும் 5,6,7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் லேலான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..”

கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 8 செ.மீ மழையும், திருவள்ளூர் ஆர்.கே. பேட்டையில் 7 செ.மீ மழையும், காரைக்காலில் 4 செ.மீ மழையும் பெய்துள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

4 தொடர்களை அதிரடியாக நிறுத்தப் போகும் விஜய் டிவி….! எந்தெந்த தொடர்கள் தெரியுமா.…..?

Mon Apr 3 , 2023
தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி. இதில் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி டிஆர்பிஐ அதிகரித்திருக்கிறார்களோ அதே அளவிற்கு நெடுந்தொடர்கள் மூலமாகவும் அந்த டிஆர்பியை இந்த தொலைக்காட்சி பெற்றுள்ளது. பிற்பகல் வேளையில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கி இடையில் இரவு வரையில் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. அதேபோல பல தொடர்களை குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் […]

You May Like