fbpx

தமிழ்நாட்டில் இன்று முதல் அதிரடியாக உயர்ந்தது பால், தயிர் விலை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழ்நாட்டில் ஆவின் பால் மட்டுமின்றி, பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 10 ரூபாய் பால் பாக்கெட் முதல் அரை லிட்டர், ஒரு லிட்டர் என பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் பாலை போலவே தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளையும் மக்கள் அதிகளவு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் தான், தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஆரோக்யா நிறுவனம், இன்று முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65இல் இருந்து 67 ஆக உயர உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, ஆரோக்யா நிறுவனம் பால் விலையை உயர்த்துவதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயராத நிலையில், பால் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இதை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36இல் இருந்து 37 ரூபாயாகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65இல் இருந்து 67 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.31இல் இருந்து 32 ரூபாயாகவும், ஒரு லிட்டர் ரூ.58இல் இருந்து 60 ரூபாயாகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30இல் இருந்து 32 ரூபாயாகவும், 500 கிராம் தயிர் ரூ.37இல் இருந்து 38 ரூபாயாகவும், 1 கிலோ தயிர் ரூ.66இல் இருந்து 68 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More : தொலைக்காட்சி நடிகர் நிதின் சவுகான் தற்கொலை..? 35 வயதில் நிகழ்ந்த சோகம்..!!

English Summary

It has been reported that Aarogya, a leading company in the sale of private milk, is going to increase the price of milk from today.

Chella

Next Post

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000 + விருது...! தமிழக அரசு அறிவிப்பு...! முழு விவரம்

Fri Nov 8 , 2024
Rs.10,000 + Award for Best Athletes

You May Like