இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரில் பிறந்த பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். இதனையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவருடன் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். மூவருக்கும் இடையே கடும் போட்டி நடந்த நிலையில், நெற்றியை தினம் வாக்குப்பதிவு நடைபெற்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன, இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மனுக்கு பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார். “சிங்கப்பூர்வாசிகள் திரு தர்மன் சண்முகரத்தினத்தை எங்கள் அடுத்த ஜனாதிபதியாக ஒரு தீர்க்கமான வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர். மாநிலத் தலைவராக, அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார், மேலும் இருப்புக்கள் மற்றும் முக்கிய நியமனங்கள் உட்பட காவலர் அதிகாரங்களைப் பயன்படுத்துவார்,” என்று சிங்கப்பூர் பிரதமர் கூறினார்.
தனது ஆதரவாளர்கள் கூடியிருந்த தமன் ஜூரோங் உணவு மையத்தில் பேசிய தர்மன், சிங்கப்பூர் மக்கள் தமக்கு அளித்துள்ள வலுவான ஒப்புதலால் உண்மையிலேயே தாழ்மை அடைவதாகக் கூறினார். ‘இந்த வாக்கினால் நான் தாழ்மையுடன் இருக்கிறேன் – இது எனக்கு வெறும் வாக்கு அல்ல, இது சிங்கப்பூரின் எதிர்காலம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் எதிர்காலத்திற்கான வாக்கு. உண்மையில் அதுதான். எனது பிரச்சாரம் நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் இருந்தது, சிங்கப்பூர் மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.