சென்னை திருவொற்றியூர், கிராமத்து தெரு பகுதியில் சாலையி நடந்து சென்று பெண்ணை,அந்த வழியில் வந்த எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி இழுத்து சென்றது, எருமை மாடு முட்டிய போது அந்த பெண்ணின் ஆடை, மாட்டின் கொம்பில் மாட்டியது, அந்த பெண்ணை 50மீட்டர் தூரம் வரை மாடு இழுத்து சென்றது. மாடு முட்டி இழுத்து சென்றதில் அந்த பெண் படுகாயமடைந்தார். மேலும் அப்பகுதியில் இரு சக்கரா வாகனத்தில் சென்றவர்களையும், நடந்து சென்றவர்களையும், அந்த மாடு முட்டியதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
மேலும் படுகாயமடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சாலைகளில் மாடுகள் சுற்று திரிந்தால் அதன் உரிமையாளரக்ள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்த போதும், தொடர்ந்து பொதுமக்களை மாடு முட்டும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர். நடந்து செல்லும் பெண்ணை மாடு மூட்டி தர தரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More: பட்டப்பகலில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!