fbpx

உயிரோடு எரிக்கப்பட்ட 1.60 லட்சம் பேர்..!! மனித எச்சங்களால் நிரம்பி வழியும் மர்ம தீவு..!! எங்க இருக்கு தெரியுமா?

பல்வேறு மர்மங்கள் நிறைந்த இத்தாலியின் போவெக்லியா (Poveglia) தீவைப் பற்றி இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம்.

இத்தாலியின் போவெக்லியா என்ற தீவில், எங்கு கால் வைத்தாலும் மனித எலும்புகளும், அங்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் உள்ளிட்ட பல்வேறு மர்மங்கல் நிறைந்த தீவாக கருதப்படுகிறது. மேலும் இந்த தீவில் விசித்திரமான குரல்கள் கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல, இந்தத் தீவுக்குச் செல்ல யாருக்கும் தைரியம் இல்லை. போனவர்களில் சிலர் திரும்பி வரவில்லை என்பதால் இங்கு செல்லும் மக்களுக்கு இத்தாலி அரசும் உத்தரவாதம் அளிப்பதில்லை என்றும் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலியின் வெனிஸ் மற்றும் லிடோ இடையே அமைந்துள்ள இந்த தீவு வெனிஸ் வளைகுடா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவு சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள நிலத்தின் பாதி பகுதி மனித எச்சங்களால் ஆனது என்று கூறப்படுகிறது. இத்தாலியில் பரவிய பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை இந்த தீவுக்கு கொண்டு சென்று அந்நாட்டு அரசாங்கம் உயிருடன் எரித்ததாகவும் இது தவிர, கருப்பு காய்ச்சலால் இறந்தவர்களும் இந்த தீவில் அடக்கம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை மர்மங்கள் நிறைந்த இந்த தீவில் ஒரு மருத்துவமனையும் இருந்தாகவும், ஆனால் அதுவும் விரைவில் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, 1960 ஆம் ஆண்டில், ஒரு பணக்காரர் இந்த தீவை வாங்கினார். ஆனால் அவரது குடும்பத்தினர் சில விபத்துகள் ஏற்பட்டு இறந்து விட்டனர். அவரும் தற்கொலை செய்து கொண்டார். அப்போதிருந்து, இந்த தீவு சபிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

Read more ; தூக்கத்தில் நடந்த துயரம்..!! உயிரை காவு வாங்கிய பிரிட்ஜ்..!! மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி..!!

English Summary

In this collection, we will learn about the island of Poveglia in Italy, which is full of various mysteries.

Next Post

வங்க தேச கலவரத்தில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை..!! - ஷேக் ஹசீனா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு..!!

Tue Aug 13 , 2024
The US White House denied Sheikh Hasina's allegation that US conspiracy was responsible for the instability in Bangladesh.

You May Like