தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடான தாய்லாந்து, உலகளவில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. கடலால் சூழப்பட்ட தாய்லாந்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இதனால் தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நாட்டின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதுடன் எண்ணற்ற உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுலாத்துறை ஆதரிக்கிறது.
கடலோர அழகு, வண்ணமயமான கலாச்சாரம் ஆகியவை உலகளவில் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக தாய்லாந்தை மாற்றி உள்ளது.. தாய்லாந்து என்றாலே அனைவருக்கும் சுற்றுலா தான் நினைவுக்கு வரும். எனினும் நாட்டின் பிற அம்சங்கள் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கின்றன.
அந்த வகையில் தாய்லாந்தின் கலாச்சார நடைமுறை குறித்து சமீபத்தில் வெளியான “Thailand’s Taboo: The Rise of Wife Rental in Modern Society” என்ற புத்தகம் விவாதப் பொருளாக மாறி உள்ளது. தாய்லாந்தில் “வாடகை மனைவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தாய்லாந்தில், “Wife on Hire” அல்லது “Black Pearl” என்று அழைக்கப்படும் ஒரு நடைமுறை உள்ளது. அதாவது குறிப்பிட்ட பணம் செலுத்தி பெண்களை வாடகை மனைவியாக மாற்றிக்கொள்ளலாம்.
இந்த தற்காலிகத் திருமண ஏற்பாட்டின் மூலம், மனைவியின் பாரம்பரியக் கடமைகள் அனைத்தையும் அந்த பெண் நிறைவேற்ற வேண்டும். ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கட்டத்திற்கு மட்டும் அப்பெண் மனைவியாக இருக்கும்.
ஆரம்பத்தில் கலாசாரத்தில் வேரூன்றிய இந்த நடைமுறை தற்போது வியாபாரமாக உருவாகி வருகிறது. தாய்லாந்தில் வாடகை மனைவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
La Vérité Emmanuel என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகம், Thailand’s Taboo: The Rise of Wife Rental in Modern Society, சர்ச்சைக்குரிய வாடகை மனைவி விவகாரம் உலகளாவிய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
வாடகை மனைவி நடைமுறை வேகமாக விரிவடைவது மட்டுமல்லாமல், தாய்லாந்தில் உள்ள பல பெண்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க வருமான ஆதாரமாகவும் மாறுகிறது என்பதை அந்த புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது..
பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு செல்லும் நிலையில், தொலைதூர மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பல இளம் பெண்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை மனைவிகளாக மாறுகிறார்கள். இருப்பினும், இந்த போக்கு பட்டாயா நகரின் சிவப்பு விளக்கு பகுதிகள், பார்கள் மற்றும் இரவு விடுதிகளில் அதிகமாக உள்ளது. அங்கு அது வளர்ந்து வரும் வணிகமாக மாறி வருகிறது..
பெரும்பாலும் வறுமை மற்றும் பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் பெண்கள், பணத்திற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை மனைவிகளாக மாறுகின்றனர். எனினும் இவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமணங்கள் அல்ல, ஆனால் குறுகிய கால ஒப்பந்தங்கள் சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும்.
இந்த பெண்களில் பலர் பார்கள் அல்லது இரவு விடுதிகளில் வேலை செய்கிறார்கள். இந்த பெண்களின் வயது, அழகு, கல்வி மற்றும் ஒப்பந்தத்தின் காலம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மாறுபடும். அதன்படி 1,600 டாலர் முதல் 116,000 டாலர் வரை வாடகை மனைவிகளுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, தாய்லாந்தில் இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இல்லை. இதனால் வாடகை மனைவி கலாச்சாரம் தாய்லாந்தில் வேகமாக பரவி உள்ளது.
தாய்லாந்தில், மனைவியை வாடகைக்கு எடுப்பது ஒரு வணிக நிகழ்வாக மாறி வருகிறது. பல பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான ஒரு வழியாக அதனை பயன்படுத்தி வருகின்றனர்..
Read More : அதிபரை எப்போதும் மகிழ்விக்க கன்னிப்பெண்கள்.. விலை உயர்ந்த ஒயின்… இந்த சொகுசு ரயில் பற்றி தெரியுமா?