கண் துடிப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பலன் குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில், பல்வேறு இடங்களில் பல விதமான நம்பிக்கைகள் இந்த கண் துடிப்பது குறித்து நிலவுகிறது. பல உடல் இயக்கங்களைப் போலவே, இதுவும் பாதிப்பில்லாதது மற்றும் தானாகவே வந்து சரியாகிவிடக்கூடிய ஒன்று. கண் துடிப்பது குறித்து அறிவியல் காரணங்கள் கூறினாலும், பலரும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகின்ற சில எதிர்கால பலன்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கின்றனர். ஜோதிடத்தின் அடிப்படையில் வலது அல்லது இடது கண் துடித்தல், கண் துடிக்கக்கூடிய நேரம், அவரின் பாலினம் ஆகியவை பொறுத்து பலன்கள் மாறும் என சில நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றன.
ஆண்களுக்கு வலது கண் : ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என்று துடிசாஸ்திரநூல் கூறுகிறது. ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இடது கண் : அதே நேரத்தில் பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படுமாம்.
அறிவியல், மருத்துவம் சொல்லும் காரணம் தெரியுமா?
ஒருவருக்கு கண் இமைகள் துடிப்பதாக, இழுப்பதான விஷயங்கள், கால்-கை வலிப்பு, பார்கின்சன் நோய், ஒவ்வாமை மற்றும் கண் காயங்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் நரம்பியல் கோளாறுகளாகப் பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் ஒரு நபர் தினமும் தான் எடுத்துக் கொள்ளும் உணவில் அத்தியாவசிய மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட்கள் எனும் உணவில் உள்ள சத்துக்கள் குறைபாடு காரணமாக இது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
Read more ; கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை…! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!