திருவாரூர் மாவட்டத்தில் கோயில் கொண்டிருக்கும் மங்கள சனீஸ்வரர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த கோயிலானது திருவாரூர் மாவட்டம் காரையூர் அருகே உள்ள ஈஸ்வர வாசல் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக சங்கர நாராயணரும், உற்சவரராக மங்கள சனீஸ்வரன் மற்றும் யோக பைரவரும், தயாராக நாராயணியும் உள்ளனர்
இந்தக் கோயிலில் சனீஸ்வர பகவான் ஒரு நதிக்கரையில் நின்றபடி சிவபெருமானை வணங்கிய மங்கள சனீஸ்வரராக காட்சி தருகிறார். நல மகாராஜனை பிடிப்பதற்காக திருநள்ளாறுக்கு சனிபகவான் தனது காக்கை வாகனத்தில் புறப்பட்டார். வழியில் இருட்டும் நேரம் வந்ததால் கண் தெரியாமல் காக்கை தவித்த நிலையில் அருகில் உள்ள சிவன் கோயிலில் இரவு தங்கு ஓய்வெடுக்க சனி பகவான் முடிவெடுத்தார். அதன்படி காக்கையும் சனி பகவானும் தங்கிய இந்த தளம் சனீஸ்வர வாசல் என அழைக்கப்படுகிறது.
காலையில் எழுந்து பார்த்தபோது வடக்கு தெற்காக கோயிலுக்கு அருகில் ஓடிய நதியை கண்டு சனி பகவான் வியந்தார். இந்த நதியில் நீராடிய நிலையில் அது விருத்தகங்கா என அழைக்கப்படுகிறது. பொதுவாக வடக்கு தெற்காக பாய்ந்து செல்லும் நதியில் புனித நீராடினால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் அதே போல் கர்ம வினைகளும் அகலும் என்பது நம்பிக்கை.
இந்த கோயிலில் சனியின் குருநாதரான பைரவர் யோக பைரவராக அருள் பாலிக்கிறார். இவரை அஷ்டமி மற்றும் பௌர்ணமி காலங்களில் செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை மற்றும புனுகு சாற்றி வழிபட்டால் பொருளாதார நிலை சீராகும் என நம்பிக்கை நிலவுகிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் மங்கள சனீஸ்வரனை வழிபட்டால் ஆயுள், மாங்கல்யம் உள்ளிட்டவற்றில் சோதனை ஏற்பட்டால் அவை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கையாகும்.
Read more: தங்க விலை உயர்வு எதிரொலி.. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு..!!