fbpx

Election 2024 | வடசென்னையில் பரபரப்பு.!! திமுக – அதிமுக மோதல்.!! வேட்பு மனு தாக்கல் செய்வதில் தகராறு.!!

Election 2024: தமிழகத்தில் 2024 ஆம் வருட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் விருப்பம் மனு தாக்கல் என்பது அதிமுக(ADMK) மற்றும் திமுக(DMK) இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலில் முதல் கெட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை பதிவு செய்து வருகின்றனர். நாளை மறுநாள் வேட்பு மனு முடிவடைய உள்ள நிலையில் மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் வேட்பு மனு திருத்தம் செய்யப்படுவதற்காக காலக்கெடு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக(DMK) மற்றும் அதிமுக(ADMK) கட்சியின் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்து பிரச்சாரத்திலும் ஈடுபட தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வடசென்னை தொகுதியில் திமுக சார்பாக கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். இந்த இரண்டு வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது

தேர்தல் அலுவலர் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனுவை முதலில் வாங்க முற்பட்டதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களது மனுவை தான் முதலில் வாங்க வேண்டும் எனக் கூறி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Read More :மேஜர் பிரச்சனை..!! குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில் சிக்கல்..!! கட்டுமானத் துறையினர் கோரிக்கை..!!

Next Post

’அங்க போய் நில்லு’..!! ரோகித் சர்மாவை அவமானப்படுத்திய ஹர்திக் பாண்டியா..!! உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..!!

Mon Mar 25 , 2024
ஐபிஎல் தொடரில் கடந்த 10 ஆண்டுகளில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார். இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் வாங்கி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி, அந்த கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொடுத்தது. இதன் காரணமாக அந்த […]

You May Like