fbpx

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்கள் எவை..? சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண, சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது..

தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கின்றனர்.. ஆனால் இது ஆகம விதிகளுக்கு எதிரானது.. எனவே ஆகம விதிகளின் படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஆகம விதிகளை பின்பற்றும் மற்றும் பின்பற்றாத கோயில்களை அறநிலையத்துறை கணக்கெடுத்து வருவதாகவும், இந்த வழக்கு தேவையற்றது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது..

அப்போது நீதிபதிகள், ஆகம விதிகளின் பின்பற்றும் கோயில்கள் மற்றும் அதனை பின்பற்றாத கோயில்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.. இதையடுத்து அந்த பணிகளுக்கு ஓய்வுபெற்ற உயர்நிதிமன்ற நீதிபதியை நியமிக்கலாம் என்று அரசு தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஒரு மாதத்திற்குள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.. மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்..

Maha

Next Post

சர்ச்சையை ஏற்படுத்திய சாதி தொடர்பான கேள்வி... உரிய நடவடிக்கை எடுக்கப்படும்... உயர்கல்வித்துறை உறுதி..

Fri Jul 15 , 2022
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதியளித்துள்ளது.. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இதுகுறித்து […]

You May Like