கடந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு, பொதுப் பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தப்படும்.
2025 ஆண்டின் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் மருந்தகம் திறப்பு விழா தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், கூடுதல் பதிவாளர் (நுகர்வு பணிகள்) அம்ரித் உட்பட இணைப்பதிவாளர்கள் மற்றும் கூடுதல் பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் மருந்தகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்துவார். ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார். சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் வரும் 24ம் தேதி திறக்கப்பட உள்ளது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பி்டத்தக்கது.
Read more : வீட்டை விட்டு தனியாக சென்ற சிறுமி; மருத்துவமனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…