fbpx

பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா..!! புறக்கணித்த கட்சிக்கு அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி..!! எதற்காக தெரியுமா..?

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது. இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு ஒய்ஆர்சிபி கலந்து கொள்ளும் என்றார்.

மேலும், இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரமாண்டமான, கம்பீரமான மற்றும் விசாலமான பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான பற்று அல்ல என்றும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Chella

Next Post

கூகுள் மேப் உதவியுடன் நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியான வழிப்பறி…..! தஞ்சை அருகே 4 பேர் கைது…..!

Thu May 25 , 2023
தஞ்சை மாவட்டம் வல்லம் மற்றும் பாபநாசம் மெலட்டூர் அய்யம்பேட்டை அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரவு சமயங்களில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் செல்வோர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி, பணம், செல்போன், மடிக்கணினி, நகைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார் வழங்கப்பட்டது. ஆகவே பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி உத்தரவின் பேரில், அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் வனிதா தலைமையில், உதவி […]

You May Like