கனமழை காரணமாக பெங்களூருவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகள் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் கர்நாடாவின் பல பகுதிகளிலும் நேற்று முன் தின முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது… இந்த கனமழை காரணமாக பெங்களூருவில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுட, பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதைத்தொடர்ந்து கர்நாடகாவின் பல மாவட்டங்களில் நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. இந்நிலையில் கனமழை காரணமாக பெங்களூருவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் ( ஆகஸ்ட் 30, 2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ராமநகர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.. மேலும் பக்ஷி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட பெரிய அளவிலான பயிர் சேதங்களை ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.. முற்றிலும் இடிந்து விழுந்த வீட்டிற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அதில் உடனடியாக ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்..
மேலும் பக்ஷி ஏரியை உடனடியாக சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், உயர்கல்வி மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர் சிஎன் அஸ்வத் நாராயணா, முன்னாள் முதல்வரும், சன்னப்பட்டின எம்எல்ஏவுமான எச்டி குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.