fbpx

தமிழ்நாட்டில் அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை..!! 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!!

சென்னை, ஈரோடு, கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் CMK Projects Pvt Ltd நிறுவனத்திலும், அந்நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒப்பந்தம் எடுத்துக் கட்டி கொடுத்துள்ளது. மேலும், இந்நிறுவனம் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

சென்னை அண்ணாநகர் ஏகே பிளாக் 10-வது மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை எலன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவரது இல்லத்திலும், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்டு ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Chella

Next Post

ஜப்பானில் அடுத்த அதிர்ச்சி..!! தரையிறங்கியபோது தீப்பிடித்து எரிந்த விமானம்..!! 300 பயணிகளின் கதி..?

Tue Jan 2 , 2024
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட அந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், நல்வாய்ப்பாக விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 300 பேர் […]

You May Like