fbpx

தமிழ்நாட்டில் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!! எங்கெங்கு தெரியுமா..?

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வருமான வரித்துறை அவ்வபோது சோதனை நடத்தி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு படூர் பகுதி, சென்னை எம்ஜிஆர் நகர் சப்தகிரி காலனியில் உள்ள தனியார் நிறுவனம், சென்னை தியாகராய நகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் உள்ள BHANDARi நிறுவனத்தில் போன்றவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், நாவலூர், நீலாங்கரை, எண்ணூர், ஓ.எம்.ஆர். உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

சோகத்தில் மூழ்கிய கிராமம், விளையாட்டு வினையானது...! பறிபோன உயிர்....!

Wed Sep 20 , 2023
பொதுவாக சிறு குழந்தைகள் விளையாட்டாக, செய்யும் ஒரு சில செயல்கள் அவர்களின் உயிருக்கு வினையாகி போவது சோகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ஆகவே, என்னதான் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக எதையாவது செய்தாலும், எப்போதும் அவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பிலும், அவர்களின் அரவணைப்பிலும் இருப்பது மிகவும் அவசியமாகிறது அந்த வகையில், விளையாட்டுத்தனமாக, தன்னுடைய தம்பி, தங்கைகளுக்கு செய்து காட்டிய ஒரு விஷயம் ஒரு சிறுவனின் […]

You May Like