இன்று காலை முதல் தமிழ்நாடு அமைச்சர் எ.வ. வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவண்ணாமலையில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, திருவண்ணாமலையில் ஐடி சோதனை நடைபெற்றது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.