திருமாவளவன் தங்கியிருந்த இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சிதம்பரத்தில் 2 நாட்களாக திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் 45 நிமிடம் சோதனை நடத்தினர். எதுவும் சிக்காததால் திரும்பிச்சென்றனர்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், தி.மு.க கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் திருமாவளவன் தங்கியிருந்த இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சிதம்பரத்தில் 2 நாட்களாக திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் 45 நிமிடம் சோதனை நடத்தினர். எதுவும் சிக்காததால் திரும்பிச்சென்றனர்.
கூட்டணியுடன் திருமாவளவன் போட்டி
சிதம்பரம் தொகுதியில் 2019 இல் போயிட்ட அவர் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் இப்போது, பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், திமுக தலைமையிலான I.N.D.I ஆதரவுடன் அவர் போட்டியிட உள்ளார். கடந்த முறை அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை எதிர்கொண்டதால் வெற்றி வித்தியாசம் குறைந்தது. இந்த முறை கூட்டணி என்ற கணக்கு சாதகமாக உள்ளது” என்று திருமாவளவன் கூறினார்.