fbpx

Income | ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரப்போகிறது..!! மத்திய அரசு எடுத்த மாஸ் முடிவு..!!

இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை, வாழ்நாள் ஊதியமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ.,வை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது. சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஐ.எல்.ஓ. ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, தற்போது தொழிலாளர்கள் வாங்கி வரும் குறைந்தபட்ச ஊதியம் என்பதற்கு மாற்றாக வாழ்நாள் ஊதியம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ.176 உள்ளது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால், இது பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆனால், இந்தியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊதியங்கள் குறித்த குறியீடு நடைமுறைப்படுத்தப்படாமல், நிலுவையில் உள்ள நிலையில், இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய ஊதிய திட்டமாக இருக்க வேண்டும் என ஐ.எல்.ஓ., மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் இதனை அமல்படுத்தி, 2030-க்குள் நிலையான வளர்ச்சியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுடன், 90% பேர் அமைப்பு சாரா துறையில் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த குறைந்தபட்ச ஊதிய அளவு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் வறுமை நிலை மாறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : BREAKING | தமிழ்நாடு முழுவதும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள்..!! மத்திய அரசின் அதிரடி திட்டம்..!!

Chella

Next Post

Toll | திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை உடைத்தெறிந்த மத்திய அரசின் அறிவிப்பு..!! வாகன ஓட்டிகள் ஷாக்..!!

Tue Mar 26 , 2024
தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் […]

You May Like