fbpx

ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!! மத்திய அரசு சொன்ன செம குட் நியூஸ்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பிரதம மந்திரி முத்ரா திட்டத்திற்கான கடன் வரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி கடந்த 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. முத்ரா கடன்களுக்கான அதிகரிக்கப்பட்ட இந்த கடன் வரம்பு குறித்து ஜூலை 23ஆம் தேதி அன்று நடைபெற்ற 2024-25 மத்திய பட்ஜெட்டின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். “பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் முத்ரா கடன்களுக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு முத்ரா திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்கு கூடுதல் உதவியாக இருக்கும்” என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் தொழிலதிபர்களை ஆதரிப்பதற்காகவும், தொழிலை விரிவுபடுத்துவதற்கு உதவுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தருண் பிளஸ் என்ற புதிய பிரிவின் கீழ் 10 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரையிலான கடன்கள் கிடைக்கும். இதற்கு முன்பு கடன்களை பெற்ற தொழிலதிபர்கள் அதனை சரியாக திருப்பி செலுத்தி இருக்கும் பட்சத்தில் இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முத்ரா கடனை பெறுவதற்கான தகுதி வரம்புகள்..?

முத்ரா கடன் என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசு கடன் திட்டம் ஆகும். இது குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கான கடன் உதவியை வழங்கி வருகிறது. இந்த கடனை பெறுவதற்கு ஒரு சில தகுதி வரம்புகளை இருக்க வேண்டும். அதன்படி கார்ப்பரேட் அல்லாத சிறு தொழில்கள், குறு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி, வணிகம், சேவை மற்றும் விவசாயம் சார்ந்த பிரிவுகளில் உள்ள தனிநபர்கள் இந்த கடனை பெற்றுக் கொள்ளலாம்.

குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன்களை வழங்குவதற்காக ஏப்ரல் 8, 2015ஆம் ஆண்டில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் கடன்கள் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைகள் மூலமாக குறு அல்லது சிறு நிறுவனங்களில் வருமானம் ஈட்டும் நபர்களுக்காக கிடைக்கிறது. பொதுவாக கடன் என்பது அத்தாட்சி அல்லது உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்படாது. ஆனால், இந்த திட்டத்தை பொறுத்தவரை, அந்த மாதிரியான எந்த விஷயமும் கிடையாது. தனி நபர் மற்றும் தொழில் பற்றிய சில தகவல்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை வழங்கினாலே இந்த திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

Read More : புயலை கிளப்பிய விஜய்..!! ஆட்சியில் பங்கு வேண்டும்..!! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த பரபரப்பு கடிதம்..!!

English Summary

It was announced on 25th that the credit limit for Pradham Mantri Mudra scheme has been increased from Rs.10 lakh to Rs.20 lakh.

Chella

Next Post

இந்த அறிகுறிகள் இருக்கா..? அப்படினா உங்கள் வீட்டிற்கு நிதி நெருக்கடி வரப்போகுது..!! உடனே இதை பண்ணுங்க..!!

Tue Oct 29 , 2024
It is said that we can find the financial crisis coming at home through some signs. Let's see what they are in this post.

You May Like