மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரண உயர்வு நவராத்திரிக்கு முன்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில், ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரண உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அரசு அவர்களுக்கு ஒரு பெரிய பரிசை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொடர்பான முறையான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், செப்டம்பர் மாதத்தில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசாங்கம் அதன் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரித்து, தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி இரண்டாவது அதிகரிப்பு குறித்த அறிவிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் இருக்கலாம். தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட AICPI குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அரசாங்கம் இதைக் கணக்கிடுகிறது. அகவிலைப்படி கணக்கீடு அந்தந்த ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் செல்கிறது.
இந்த முறை அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் 4 அல்லது 3 சதவீதம் அதிகரிக்கலாம். இருப்பினும், AICPI குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி இம்முறையும் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இம்முறை அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரியவரும்.