தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் எருமை பாலின் கொள்முதல் விலை, இனி 47 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே, 35 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது, டிசம்பர் 18ஆம் தேதி முதல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.